தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, புகழ்மணக்க என்பதை திகழ் மனக்க என்று, 2 முறை தவறாக பாடப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது உதயநிதி கொடுத்த ரியாக்ஷன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடவில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.