சிவகாசி: கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபயணம்...

70பார்த்தது
சிவகாசியில் நடைப்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற 15 கிலோமீட்டர் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியின் உடற் கல்வியியல் துறை சார்பாக, ஒவ்வொருவரும் அன்றாடம் நடைப்பயிற்சி செய்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "நடைப்பயிற்சி உயிர் மூச்சு" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்திலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற வாக்கத்தான், சிவகாசி ஹவுசிங்போர்டு, ரிசர்வ் லைன், லட்சுமியாபுரம், ஆனையூர், அய்யம்பட்டி, பெரிய பொட்டல்பட்டி போன்ற கிராமப்புறங்களின் வழியாக சென்று விளாம்பட்டியில் முடிவடைந்தது. 15 கிலோமீட்டர் தூரத்தை நடை பயணமாக கடந்த மாணவர்கள், நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து கிராமப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி