சிவகாசியில் பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது
By sathya 1839பார்த்ததுவிருதுநகர்: சிவகாசியில் பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்குபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் மீனம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் அனுமதியின்றி அட்டை பெட்டியில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தென்னரசு (57) என்பவரை கைது செய்தனர்.