விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி, முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவரது வீட்டில் சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார். அதைப் போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார். உடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.