சாத்தூர் அருகே காவல் நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள். ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே இருக்கன்குடி காவல் நிலையம் எல்லையில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த காவல் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக திருட்டு, விபத்து மற்றும் சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள், லாரி, ஆட்டோ என பல்வேறு வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் கேட்பாரற்று கிடப்பதால் வாகனங்களில் உள்ள உதிரி பாகங் கள் சமூக விரோதிகளால் திருடப்படும் நிலை ஏற்பட்டு ட உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பதால் துருப்பிடித்து வீணாவதுடன் ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வரு வாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்களை ஏலம் விட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.