சாத்தூர் அருக கஞ்சா பறிமுதல்: சிறுவன் உள்பட இருவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே தாயில்பட்டியில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி அருகே அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கஞ்சா
விற்பனை செய்வதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தன. மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சந்தேகப்படும்படி அங்கு இருந்த இருவரிடம் ஆய்வு செய்ததில் அவர்களிடம் இருந்து மொத்தம் 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீஸ் விசாரணையில் தாயில்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் 43. வேல்துரை, சிறுவன் கருப்பசாமி கஞ்சா விற்பனையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் வெம்பக்கோட்டை போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.