சாத்துார்: மினி பேருந்து ஓட்டுனருக்கு இரும்புச்கம்பியால் அடி.

69பார்த்தது
சாத்துார் அருகே மினி பஸ் டிரைவருக்கு இரும்புக்கம்பி அடி. போலீஸார் விசாரணை.
விருநகர் மாவட்டம்,
சாத்தூர் அடுத்த உள்ள
என். மேட்டுப்பட்டி தெற்குக் தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(24). இவர் சாத்தூரில் இருந்து ஓ. மேட்டுப்பட்டி
செல்லும் மினி பஸ்சில்
டிரைவராக உள்ளார். இவர் மார்ச். 23 நேற்று இரவு ஓ. மேட்டுப்படியில் பஸ்சில் இருந்தார். அப்போது அங்கு வந்த சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்த முனியசாமி உள்பட 3 பேர் ராம்குமாரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். அப்போது பஸ்சில் இருந்தவர்கள் கூச்சல் போடவே மூன்று பேரும்
அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்த மினி பஸ் டிரைவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா
போலீசார் வழக்கு பதிவு
விசாரணை செய்தனர். இதில் முனியசாமியின் கொழுந்தியாள் உடன் டிரைவர் பேசியுள்ளார். அதை கண்டித்தும் கேட்காததால் இரும்பு ராடால் தாக்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து தப்பி சென்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி