சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூரை அடுத்தயுள்ள வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செண்பக வேலன் மற்றும் போலீசார் தெற்கு ஆனைக்குட்டம்,
வெற்றிலையூரணி, மேலஒட்டம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? என ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெற்றிலையூரணி அருகே அரசரடி காலனியில் உள்ள தகரசெட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து தகர செட்டை போலீசார் சோதனை நடத்தினர். அங்கு சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 30 கிலோ கார்ட்டூன் வெடிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசரடி காலனியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (வயது 24) என்பதும், சட்ட விரோதமாக பட்டாசு தயார் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.