சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோத உள்ளன. பலரும் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என பிரபல ஐஐடி பாபா கணித்துள்ளார். மகா கும்பமேளாவில் புகழ்பெற்ற இவர், “இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற முடியாது. விராட் கோலியால் கூட அணியை காப்பாற்ற முடியாது. இந்திய அணி இனி வெல்லப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.