அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு, 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்' என குறுஞ்செய்தி அனுப்பினால் குற்றம் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பெண் கவுன்சிலருக்கு, நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள், அழகாக இருக்கிறீர்கள், உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என குறுஞ்செய்தி அனுப்பிய நபர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அந்த நபருக்கு 3 மாத சிறை தண்டனையை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.