கேரளா: கொல்லத்தில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே டெலிபோன் கம்பத்தை வைத்து உடைக்க முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட 2 இரும்பு கம்பங்களை உடைத்து கொண்டு போய் விற்பனை செய்வதற்காக தண்டவாளத்தில் வைத்ததாக கைதானவர்கள் போலீசிடம் தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் ராஜேஷ், அருண் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் மீதும் பல குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
இது திருட்டு முயற்சியா? அல்லது ரயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.