ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் அஜித் குமார், திரிஷா உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஏப்ரல் 10 அன்று உலகளவில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி ரூ.250 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ட்ரைலர் அல்லது டிரைலர் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என சினி வட்டாரங்களில் இருந்து நமக்கு பிரத்தியேக தகவல் கிடைத்துள்ளது.