விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையை சேர்ந்தவர் மகேஸ்வரன் (25), இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதை மனைவி ராமலட்சுமி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த மகேஸ்வரன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுதியுள்ளது.