வங்கி கடன் பெற்றவர்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தின் மீது எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், "மருத்துவக் காப்பீடு தொடர்பாக விவாதிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், மருத்துவக் காப்பீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என பேட்டியளித்துள்ளார்