சாத்தூர்: சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கிய நபர் கைது..

54பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே உள்ள முத்தால் நாயக்கன்பட்டியில் வீரக்குமார் என்பவர் தீரா என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பட்டாசு கடை அருகே தகர செட் அமைத்து கிப்ட் பாக்ஸ் மற்றும் பல தரப்பட்ட பட்டாசுகள் பதுக்கி இருப்பதாக சாத்துார் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் ஆய்வில் தகர செட்டில் இருந்த கிப்ட் பாக்ஸ் மற்றும் பல தரப்பட்ட பட்டாசுகள் அடங்கிய பெட்டிகளை பறிமுதல் செய்து, வீரக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி