சாத்தூர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் 17ம் நூற்றாண்டு புழக்கத்தில் இருந்த தென் இந்திய தங்க காசு என சொல்லப்படும் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜீன் 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது. முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கிபி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செம்பு காசு, சங்கு வளையல்கள், திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது நடைபெற்ற அகழாய்வில் 17ம் நூற்றாண்டு புழக்கத்தில் இருந்த தென் இந்திய தங்க காசு என சொல்லப்படும் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பக்கத்தில் 6 இதழ் கொண்ட பூ போன்ற வடிவமும், மற்றொரு பக்கத்தில் புள்ளிகள் கோடுகளால் அலங்கறிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தங்க நாணயம் முன்னோர்கள் அலங்கார பொருட்களாக பயன்படுத்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.