சாத்துார்: லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

62பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே மேல் காந்தி நகரிலுள்ள தியேட்டர் முன்பாக தமிழக அரசால் தடைசெய்த லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக சாத்தூர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் போலீஸார் நேரில் சென்று சோதனை செய்தனர்.

சோதனையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி