உலக தாய்மொழி தின விழா கொண்டாட்டம்

538பார்த்தது
உலக தாய்மொழி தின விழா கொண்டாட்டம்
சாத்தூரில் உலக தாய்மொழி
தினவிழா நடைபெற்றது அதில் மாவட்ட ஆட்சியர் பேசியது.
மொழி மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிக மிக உயர்ந்தது. பொதுவாக கண்டுபிடிப்புகள் என்பது மறைந்திருக்கும் ஒரு மறைபொருளை கண்டளிப்பது அல்லது புதிதாக ஒன்றை உருவாக்குவது. அமெரிக்காவை கண்டுபிடித்தார்கள் என்றால் மறைந்திருந்த ஒரு இடத்தை சென்று கண்டுபிடித்தார்கள். மின்சாரம் உருவாக்கப்பட்டது என்றால் மின்சாரம் உருவாவதற்கு தேவையான அறிவியலின் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மொழி இந்த இரண்டிலும் மேம்பட்டது. மொழி எப்படி உருவாகிறது. ஆதியில் ஒலி சப்தமாக உருவாகியது என்று எல்லா சமய இலக்கியங்களிலும் குறிப்பிடுகின்றனர். மொழி எதற்காக உருவாகி இருக்கக்கூடும். மனிதன் தன்னை ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத்தான் மொழி உருவாகி இருக்கக்கூடும்.
மனிதன் காடுகளில் விலங்குகளோடு வாழ்ந்த போது, தன்னுடைய அபய குரலை எழுப்புவதற்காக மொழி உருவாகி இருக்கக்கூடும். அதனால் தான் பல தமிழ்ச் சொற்களை நாம் உச்சரிக்கும் போது, அடிவயிற்றில் இருந்து எழுப்பக் கூடியதாக இருக்கும். அடிவயிற்றில் இருந்து எழுப்பக் கூடிய ஒலி தான் சப்தமாக மாறி வார்த்தைகளாக உருவாகி புதிய, புதிய பதங்களை நமக்கு சொல்லி தருகிறது. அப்படிப்பட்ட மொழி தான் மனிதர்களை அபயகுரலை எழுப்புவதற்காகவும், தன்னுடைய நாகரிக மேம்பாட்டிற்காகவும், அவனோடு இயைந்து பயணித்ததாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி