100 நாள் வேலை முழுமையாக வழங்க ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்பு திட்டத்தால் கிராமப்புற வறுமையை போக்கிடவும், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளின் எளிய வேலை வாய்ப்பாகவும் இருந்து வருகிறது. மேற்படி வேலையின் பயனாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மரங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் மோடி அரசு படிபடியாக நிதியை குறைத்து அழிக்க நினைக்கிறது. அதனால் மிக குறைந்தளவு
மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. வேலை கேட்கும் அனைவருக்கும் பாரபட்சமின்றி வேலை வழங்கிடு என கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் , விருதுநகர் மாவட்டத்தின் சார்ப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு கன்வீனர் சீனிவாசன், முனியராஜ்
ஆகியோர் தலைமையில் தாஙகினர். ஆர்பாட்டத்தில் சி. பி. எம். நகர் குழு அமைப்பாளர் லட்சுமி, ஒன்றிய குழு சரோஜா, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுப்பாராஜ், மனோஜ்குமார் ஆதியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :