விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று (செப்.,11) இலக்கிய மன்ற தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது. பாடப்புத்தகங்களில் இல்லாததையும், உங்களுடைய கற்பனைகளின் இருக்கக்கூடியவற்றை மொழியாக மாற்றுவதற்கும் நீங்களும் முயல வேண்டும் என்பதற்குத்தான் இலக்கிய மன்றம் துவங்கப்படுகிறது.
இலக்கியம் போன்று பெரிய நூல்கள், இலக்கண விதிகளின் அடிப்படையில் எடுத்துக் கொண்ட பாடல்கள் மட்டுமல்ல ஒரு சாதாரண கதை அந்த கதை இந்த சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிகப்பெரிய இலக்கியமாக இருக்கும். இலக்கியம் என்பது படைப்பு இலக்கியங்கள், கற்பனை இலக்கியங்கள் மட்டுமல்ல. எந்த ஒன்றையும் பதிவு செய்து வைத்திருந்தால் அதுவும் இலக்கியம் என்று கூறினார்.