மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம் என ஒன்றிய பட்ஜெட் குறித்து தவெக தலைவர் விஜய் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது. அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.