இசையமைப்பாளர் இளையராஜா கர்வமானவர் என்று பரவி வரும் விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்துள்ளார். சமீபத்தில் இளையராஜா அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கு வராம வேற யாருக்குடா கர்வம் வரும்? எனக்கு தான் இந்த திமிரு ஜாஸ்தியா இருக்கணும். ஏன்னா இந்த உலகத்துல யாரும் செய்யாததை நான் செய்து கொண்டிருக்கிறேன். உலகத்தில் யாரும் செய்ய முடியாததை நான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு திமிரு இல்லாமல் எப்படி இருக்கும்" என்று கூறியுள்ளார்.