ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமாருக்கு தவெகவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "தவெகவில் இணையும் மாற்றுக்கட்சியினரை வரவேற்போம். ஆனால், கட்சிக்காக சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டியவர்களுக்கே பதவி தருவோம்" என்று கூறியுள்ளார்.