மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய பட்ஜெட் குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "மத்திய அரசின் பட்ஜெட் துப்பாக்கி தோட்டா காயங்களுக்கு பேண்டேஜ் போடுவதாக உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நமது பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கு ஒரு முன்னுதாரணமான மாற்றம் தேவைப்பட்டது. ஆனால், இந்த அரசாங்கம் யோசனைகள் எதுவும் இல்லாமல் திவாலாகி விட்டது" என்று பதிவிட்டுள்ளார்.