தமிழ்நாடு அரசு கலைஞர் கைவினைத் திட்டம் (Kalaignar Kaivinai Thittam) தொடங்கியுள்ளது. இதில், கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் வரை பிணையமில்லாமல் கடனுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்களைப் பெறவும் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைகளை பெறவும் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04151-294057ஆகிய எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.