அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், இலக்கியா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் வேறு ஒரு பெண்ணுடன் வெங்கடேஷுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு திருச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு இலக்கியா சென்றுள்ளார். இதனிடையே சமாதானம் பேச மாமியார் வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ், சிறுகனூர் அருகே உள்ள வாய்க்காலுக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.