ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையும் மற்றும் 8ஆம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து எப்எல்2, எப்எல்3, மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (டாஸ்மாக்) நடத்தும் அனைத்து மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.