“வேங்கைவயல் விவகாரத்தை வைத்து தவறான பரப்புரை செய்ய வேண்டாம்; அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்” என முரசொலி பத்திரிகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆதாரங்கள் இருக்குமானால் புலனாய்வு அமைப்பு, விசாரணை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கலாம் என்று உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது. அப்படி ஏதாவது தகவல் தெரியுமானால் அங்கு சொல்லலாம்” என குறிப்பிட்டுள்ளது. வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களும் தமிழக அரசை குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.