20 ஆண்டுகளாக தரமான கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்கிவரும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி(MAHER) 3 சுகாதாரத் திட்டங்களை தொடங்கியுள்ளது. பிரசவத்தின்போது இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள மீனாட்சி மகப்பேறு திட்டம் மூலம் கர்ப்பிணிகள் ரத்த, சிறுநீர், இதய பரிசோதனைகள், ஸ்கேன்கள் மற்றும் மருந்துகளை இலவசமாக பெறலாம். கர்ப்ப காலத்தில் ரூ.2,000 வழங்குவதோடு பிரசவத்திற்குப் பின் ரூ.10,000 நிதியுதவியும் அளிக்கப்படும். இது தவிர குழந்தைக்கு ரூ.2,000 மதிப்புள்ள பரிசு பெட்டகமும் வழங்கப்படும்.