ராஜபாளையம் அருகே தளவாய்புரம். நல்லமங்கலம் பகுதியைச் சார்ந்தவர் ராஜலட்சுமி நேற்று இரவு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சிவகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராஜலட்சுமி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய சிவகிருஷ்ணன் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்