’செள செள’ காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன, இது அதிகமாக நீர் உள்ளடக்கம் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட ஒரு காய்கறியாகும். செள செள காய்கறியானது டையூரிடிக் பண்புகளை கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்களில் உள்ள கூடுதல் திரவங்களை அகற்றி அதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.