அமெரிக்கா: Philadelphia நகரில் சிறிய ரக விமானம் வீடுகள் மற்றும் ஷாப்பிங் மால் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக வீடுகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மீட்புப்படையினர் தீயை முழுமையாக அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் இரண்டு பேர் பயணித்த நிலையில் விபத்து நடந்த இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.