உ.பியில் 2 திருமணங்கள் செய்துகொண்ட மருத்துவர் தங்களுடன் சரிசமமாக நேரத்தை செலவிடும் வகையில் அவரது 2 மனைவிகள் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதன்படி, அந்நபர் ஞாயிற்றுகிழமையை தாயுடனும், 3 நாட்களை முதல் மனைவியுடனும், மற்ற 3 நாட்களை 2வது மனைவியுடனும் செலவிட வேண்டும். திங்களன்று காவல் நிலையம் சென்ற 2வது மனைவி, தான் கர்ப்பமாக இருந்தபோது கணவர் கண்டுகொள்ளவில்லை என புகாரளித்தன்பேரில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.