’பராசக்தி’ திரைப்பட தலைப்பை பயன்படுத்தக் கூடாது

58பார்த்தது
’பராசக்தி’ திரைப்பட தலைப்பை பயன்படுத்தக் கூடாது
சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு 'பராசக்தி' என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கும் தெலுங்கில் 'பராசக்தி' என தலைப்பு வைத்தனர். இந்நிலையில் சிவாஜி நடிப்பில் 1952-ல் வெளியான 'பராசக்தி' படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ”எங்கள் படத்தை டிஜிட்டல் முறையில் மீண்டும் ரிலீஸ் செய்கிறோம். எனவே 'பராசக்தி' தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி