மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனாலிசா என்ற பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்ததில் நாடு முழுவதும் வைரலானார். இந்த சூழலில் விரைவில் பாலிவுட் ஹீரோயினாகவும் அறிமுகமாக உள்ளார் மோனாலிசா. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது புதிய படத்தில் மோனாலிசாவை நாயகியாக நடிக்கவைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.