தென்னகத்து பதுவை, கோடி அற்புதர் என மக்களால் அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இறுதியில் தொடங்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் (ஜன., 30) கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா சிறப்பு நிகழ்வாக வருகிற 10ஆம் தேதி மாலையில் திருப்பலியும், புனித அந்தோணியார் உருவம் தாங்கிய சப்பர பவனியும் நடக்கிறது. 11ஆம் தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பங்கேற்று ஆண்டு பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுகிறார்.