இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 182 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆட்டத் தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதையடுத்து, ஹர்திக் - டூபே இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹர்திக் மற்றும் டூபே தலா 53 ரன்கள் அடிக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தது.