உதயநிதி துணை முதல்வர் பொறுப்பேற்பதால் என்ன லாபம் KTR பேச்சு.

69பார்த்தது
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பேற்பதால் தமிழகத்திற்கு என்ன லாபம்.
ராஜபாளையத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கேடிஆர் பேச்சு.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றன. முன்னாள் அமைச்சர்
கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைப்பெற்றன.
பின்னர்
கே. டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பேற்பதால் தமிழகத்திற்கு என்ன லாபம்.
விலைவாசி அதிகமாக உயர்ந்து விட்டது. ஏழைகள் வயிற்றில் அடிக்கும் யாரும் விளங்கவே மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் தாமிரபரணி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது நிர்வாக சீர்கேடுகள் காரணமாக 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் ராஜபாளையம் தொகுதியில் இருபாலர் பயிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். ஆவின் பால் விலை உயர்வுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்தது காரணம் என தமிழக அமைச்சர் கூறுகிறார். அந்த லூசுக்கு பாலுக்கு வரி கிடையாது என்பது கூட தெரியவில்லை என்றார். மேலும் கூட்டத்திற்கு நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி