துக்க நிகழ்வில் இளைஞருக்கு கத்தி குத்து

83பார்த்தது
துக்க நிகழ்வில் இளைஞருக்கு கத்தி குத்து
அருப்புக்கோட்டை அருகே கட்ட கஞ்சம்பட்டியில் துக்க நிகழ்வில் இளைஞருக்கு கத்திக்குத்து; தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

அருப்புக்கோட்டை அருகே கட்ட கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார்(39). ராஜ்குமாரை அம்மன்பட்டியை சேர்ந்த அவரது உறவினர் நல்ல மருது என்பவர் அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கட்ட கஞ்ச பட்டியில் ராஜ்குமார் பாட்டி துக்க நிகழ்வின் போது அங்கு வந்த நல்ல மருது மீண்டும் ராஜகுமாரை கேலி கிண்டல் செய்துள்ளார். இதனால் ராஜ்குமார், நல்ல மருதுவை சத்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நல்ல மருது, ராஜ்குமாரை கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த ராஜ்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தாலுகா போலீசார் நேற்று (31. 12. 23) நல்ல மருது மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த செய்தி குறிப்பை போலீசார் இன்று (1. 1. 24) வெளியிட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி