தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனை கூட்டம்

77பார்த்தது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனை கூட்டம்
அருப்புக்கோட்டை தவ்ஹீத் பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அருப்புக்கோட்டை கிளை சார்பில் போதை ஒழிப்பு பிரச்சாரக் கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரியாஸ் அஹமது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முஹம்மது ஷபிக் மற்றும் மாநில பேச்சாளர் அபுபக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மது போதைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டை தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் வினா தாள் கசிவை கண்டித்தும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வலியுறுத்தியும், இந்தியா முழுவதும் போதை பொருளை கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர தலைவர் ஹக்கீம் தலைமையில் கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி