சாலை விபத்துகளை குறைக்க முடியாதது, வருத்தத்தை தருவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், சாலை விபத்துகள் தொடர்பாக வெளிநாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்கும்போது, தனது முகத்தை மறைத்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், விதிகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.