சாலையில் கிளம்பும் தூசியால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி

79பார்த்தது
அருப்புக்கோட்டை எஸ். பி. கே பள்ளியில் இருந்து புதிதாக போடப்பட்ட சாலையில் அளவுக்கு அதிகமான தூசி கிளம்பி பள்ளி மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி.

அருப்புக்கோட்டை எஸ். பி. கே பள்ளியில் இருந்து மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை சேதமடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக மேடும் பள்ளமுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வந்த நிலையில் இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து தற்போது இந்த சாலையில் பள்ளங்கள் உள்ள பகுதியில் மட்டும் புதிதாக சாலைகள் போடப்பட்டுள்ளது. அப்படி போடப்பட்ட சாலைகள் முறையாக போடப்படாமல் புதிதாக போடப்பட்ட சாலையில் மேல் அளவுக்கு அதிகமான கிரஷர் தூசி கொட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள், பிற வாகனங்கள் செல்லும் போது அளவுக்கு அதிகமான தூசி காற்றில் பறக்கிறது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர். ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சென்று பிரதான சாலையாக இந்த சாலை உள்ளது. இதுபோன்று அளவுக்கு அதிகமாக வரும் தூசியால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி