கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட “அல் உம்மா” இயக்க தலைவர் பாஷா, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 8 மாதங்களாக தொடர் பரோலில் உள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென உடல்நிலையில் மோசமாக பாதிப்பு ஏற்பட்டு, கோவை பீளமேடு PSG தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (டிச.16) மாலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.