3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை குறைந்த ரன்னில் சுருட்டி பாலோ-ஆன் கொடுக்க முயற்சிப்போம் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். மேலும் அவர் "ஆடுகளம் இன்னும் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. நாளை நாங்கள் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்தோம் என்றால், முன்னதாகவே இந்திய விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இது இந்தியாவை பாலோ-ஆன் ஆக்க கூடுதல் வாய்ப்பை கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.