இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகா, பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்தும், மோதலைத் தவிர்ப்பதை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தை நிகழ்த்தியது வரவேற்கத்தக்கது. இந்நிலையில், இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்வதையும், பிடித்து வைத்துள்ள அவர்களது படகுகளை விடுவிப்பதையும் அனுர குமார திசநாயகா பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.