மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை சேர்ந்த கிராம மக்கள் மலைமீது அமர்ந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அரிட்டாபட்டி மலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் அப்பகுதி மக்கள், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யும்வரை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் சுற்றியுள்ள கிராம மக்களை ஒன்றிணைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.