2025 வரப்போகுது. எது மாறுதோ இல்லையோ ஜெனரேஷன் புதிதாக மாறுகிறது. 1995-2009 வரை Gen Z,. 2010-24 வரை Gen Alpha… இந்த வரிசையில் 2025 ஜனவரி 1 முதல் பிறக்கப்போகும் குழந்தைகளின் தலைமுறை Gen Beta என அழைக்கப்படும். சுருக்கமாக Gen B. இவர்கள் வளர்ந்துவர 2040 ஆகிவிடும். அப்போது உலகத்தின் டெக்னாலஜியே தலைகீழாக மாறியிருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.