சிரியா மீது இஸ்ரேல் நிலநடுக்க வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் பெரும்பகுதிகளை கிளர்ச்சிக் குழுவினர் கைப்பற்றியதால் அதிபர் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், இஸ்ரேல் சிரியாவின் மீது நிலநடுக்க வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலின்போது சிரியாவில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.