22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போது நடைபெற்று வருகிறது. அதில், பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் திரையிடப்பட்டது. அப்போது பா.ரஞ்சித், மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி பேசினார். இது குறித்து அவர் பேசுகையில், 'நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது கதை எழுத ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் விஜயகாந்த் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை வில்லனாகக் கற்பனை செய்து கூட கதைகள் எழுதியிருக்கிறேன்' என்றார்.