கழிவுகளை எரிப்பதால் புகை சூழ்ந்து பொதுமக்கள் அவதி

50பார்த்தது
அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி உச்சினி மாகாளி அம்மன் கோவில் பின்புறம் பெரிய கண்மாய்க்குச் செல்லும் மழைநீர் வரத்து கால்வாய் ஓடை அமைந்துள்ளது. ‌ இந்த ஓடையில் சிலர் குப்பைகளையும் கட்டிட கழிவுகளையும் கொட்டி வருவதால் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுருங்கி வருகிறது. மேலும் அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் விஷப்புகை சூழ்ந்து பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனைகள் உண்டாகிறது. மழைநீர் வரத்து கால்வாய் ஓடை இதுபோன்று கழிவுகளை கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதால் சிறிது சிறிதாக சுருங்கி மழை நீர் செல்ல வழி இன்றி மழை காலங்களில் அப்பகுதியில் கடல் போல் மழை நீர் தேங்குகிறது. அப்போது காடுகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அருப்புக்கோட்டையில் பல இடங்களில் இதே போன்று நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுருங்கி வருகிறது. எனவே இப்பகுதியில் கொட்டப்பட்டிருக்கும் அனைத்து கழிவுகளையும் அப்புறப்படுத்தி மழை நீர் வரத்து கால்வாய் ஓடையை மீட்டெடுத்து மழைநீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி